மகாசிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்


மகாசிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகாசிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தூத்துக்குடி

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

சிறப்பு பூஜை

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு சிவராத்திரி நாளில் சனிப்பிரதோஷமும் வருவதால் அதற்கான பூஜைகளும் நடக்கின்றன. சிவராத்திரி விழா அன்று மாலை 3.30 மணி முதல் சுவாமி, அம்பாள் மற்றும் நந்திக்கு பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை சனிப்பிரதோஷத்துக்கான பூஜைகள் நடக்கிறது. அதன்பிறகு 4 கால பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு 10 மணி, நள்ளிரவு 12 மணி, மறுநாள் அதிகாலை 2 மணி, 5 மணி ஆகிய நான்கு கால பூஜைகள் நடக்கிறது. பூஜைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அபிஷேகம் நடைபெறும்.

வசதிகள்

மேலும் பூஜைகளை அனைத்து பக்தர்களும் பார்ப்பதற்கு வசதியாகவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவதற்காகவும் வரிசை முறை அமல்படுத்தப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, விரதம் இருப்பவர்கள் அமருவதற்கான வசதி, வாகனம் நிறுத்தும் இட வசதி கோவில் நிர்வாகம் மூலம் ஏற்படுத்தப்படுகிறது.

சிவராத்திரி அன்று விரதம் இருக்கும் பக்தர்கள் தவிர மற்ற பக்தர்களுக்கு பால் உள்ளிட்டவை உபயதாரர்கள் மூலம் கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த தகவலை, கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தெரிவித்துள்ளார்.


Next Story