சிம்ம வராகி அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம்


சிம்ம வராகி அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் சிம்ம வராகி அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ம வராகி அம்மன் அருள்பாலிக்கிறார். நேற்று பஞ்சமி தினத்தையொட்டி சிம்ம வராகி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், பால், தேன் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story