ரெயில்வே வாரிய தேர்வுகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கம்


ரெயில்வே வாரிய தேர்வுகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கம்
x

Image Courtesy : PTI 

தேர்வர்களின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது

இந்திய ரெயில்வே வாரிய இரண்டாம் கட்டதேர்வுகள் வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால், தேர்வர்களின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரெயில்வே வாரிய தேர்வு சிறப்பு ரெயில் நெல்லை - பெங்களூரு இடையே இயக்கப்படுகிறது . நெல்லையில் இருந்து ஜூன் 13ம் தேதியன்று இரவு 11.00 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் , மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மறுமார்க்கம் பெங்களூரிலிருந்து ஜூன் 17ம் தேதியன்று மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி - குர்னூல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது . தூத்துக்குடியில் இருந்து ஜூன் 13ம் தேதி மதியம் 12.00 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு குர்னூல் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மறுமார்க்கத்தில் குர்னூல்- இருந்து ஜூன் 17ம் தேதியன்று இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 02.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .


Next Story