போலீஸ் நிலையத்தில் எழுத்தர்களின் பணி தொடர்பான சிறப்பு புத்தாக்க பயிற்சி


போலீஸ் நிலையத்தில் எழுத்தர்களின் பணி தொடர்பான சிறப்பு புத்தாக்க பயிற்சி
x

போலீஸ் நிலையத்தில் எழுத்தர்களின் பணி தொடர்பான சிறப்பு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் எழுத்தர்களாக பணிபுரியும் போலீசாருக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் முன்னிலை வகித்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் கலந்து கொண்டு போலீசாருக்கு எழுத்தர்களின் பணி குறித்து சிறப்பு புத்தாக்க பயிற்சி அளித்தார். அப்போது அவர் பயிற்சியில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் எழுத்தர்கள் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்தும், எழுத்தர்களின் பணி குறித்தும், போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு தினசரி பணிகள் எவ்வாறு சுழற்சி முறையில் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும், வழக்கு கோப்புகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும், கணினியில் வழக்குகளை எப்படி பதிவு செய்வது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர்கள், நடப்பு தாள் எழுத்தர்கள், வட்ட போலீஸ் நிலைய எழுத்தர்கள் மற்றும் சி.சி.டி.என்.எஸ். கணினியில் பணிபுரியும் போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


Next Story