ஓசூர் பிரத்தியங்கரா கோவிலில் சிறப்பு யாகம்திரளான பக்தர்கள் பங்கேற்பு


ஓசூர் பிரத்தியங்கரா கோவிலில் சிறப்பு யாகம்திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள ராகுகேது அதர்வண மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் அம்மனுக்கு பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், ராகு, கேது, மகா காலபைரவர் ஆகிய சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம், மகா தீபாராதனை, இரவு சிறப்பு யாக சாலை பூஜை நடந்தது. இதில் மிளகாய் வத்தல் யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story