ஓசூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு யாகம்


ஓசூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தை மாத பவுர்ணமியையொட்டி ஓசூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவிலில் தை மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மிளகாய் வத்தலை கொண்டு யாகபூஜை நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், மிளகாய் வத்தலை எடுத்து தங்கள் தலையை சுற்றி யாக குண்டத்தில் போட்டு வழிபட்டனர். தொடர்ந்து ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு பிரீத்தி யாகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story