தபால் நிலையங்களில்பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்அதிகாரி தகவல்


தபால் நிலையங்களில்பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர்


மத்திய அரசின் 2023-24 -ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பெண்கள் மேம்பாட்டிற்காக தபால் நிலையங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் "மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" (மகளிர் மதிப்பு திட்டம்) ஆகும். இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் வயது வரம்பின்றி சேரலாம்.

இத்திட்டம் கடந்த 1-ந்தேதி முதல் 31.3.2025 வரையிலான காலக்கட்டத்தில் செயல்படும். இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.5 சதவீதம், காலாண்டிற்கு ஒருமுறை கூட்டு வட்டி அடிப்படையில் கணக்கிட்டு சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சத் தொகை ரூ.1000, அதிகபட்சத் தொகை ரூ.2 லட்சம், கணக்கைத் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்ச்சி அடையும்.

கணக்கை தொடங்கிய நாளில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு தேவை ஏற்பட்டால், இருப்புத்தொகையில் 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம். மேலும் கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடிக்கலாம். அவ்வாறு முடிக்கப்படும் கணக்கிற்கு 5.5 சதவீதம் வட்டி கணக்கிட்டு வழங்கப்படும். மகளிர் மேம்பாட்டிற்காக, பிரேத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை கடலூர் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story