இல்லம்தேடி கல்வி குறித்து அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு


இல்லம்தேடி கல்வி குறித்து அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு
x

வி.சி.மோட்டூரில் இல்லம்தேடி கல்வி குறித்து அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜா ஒன்றியம் வி.சி.மோட்டுர் ஊராட்சி துளசி மாடத் தெருவில் உள்ள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருவதை ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, அரசு சிறப்பு செயலர் வி.சம்பத் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் தரையில் அமர்ந்து மைய செயல்பாடுகளை பார்வையிட்டார். மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story