சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
x

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் பரிதாபமாக இறந்தாா்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் பரிதாபமாக இறந்தாா்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராஜி(வயது 55). இவர், செம்பனார்கோவிலில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 23-ந் தேதி இரவு மயிலாடுதுறை கடைவீதிகளில் பாதுகாப்பு பணியை முடித்து விட்டு ராஜி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஓ.என்.ஜி.சி. அலுவலகம் அருகில் ராஜி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ராஜி ஓட்டிச்சென்ற மோட்டர் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த ராஜியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிசிக்சை பலனின்றி மறுநாள்(தீபாவளி அன்று) ராஜி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான ஆறுபாதி வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் மாதவன்(25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி

விபத்தில் பலியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜியின் உடல் செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள போலீசார் குடியிருப்பில் வைக்கப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


Related Tags :
Next Story