பணம் கையாடல், கொலை வழக்கில் சிக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி நீக்கம்


பணம் கையாடல், கொலை வழக்கில் சிக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி நீக்கம்
x

பணம் கையாடல்-கொலை வழக்கில் சிக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரை பணிநீக்கம் செய்து நெல்லை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருநெல்வேலி

பணம் கையாடல்-கொலை வழக்கில் சிக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரை பணிநீக்கம் செய்து நெல்லை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஆனந்தன். இவர் இதற்கு முன்பு பழவூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, போலீஸ் நிலையத்திற்கு பொருட்கள் வாங்க வழங்கப்பட்ட பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆனந்தன் மீது புகார் எழுந்தது.

பணி நீக்கம்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில், ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆனந்தனை பணி நீக்கம் செய்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடியாக உத்தரவிட்டார்.

போலீஸ்காரர்

இதேபோல் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). இவரும் பழவூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு என்.ஜி.ஓ. பி காலனியை சேர்ந்த முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் அருள் விசுவாசம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மணிகண்டன் கைதாகி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். தொடர்ந்து மணிகண்டன் மீது துறைரீதியான நடவடிக்கையாக பணி நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.

பரபரப்பு

பணம் கையாடல், கொலை வழக்கில் சிக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story