கர்நாடக மாநிலம் ஹூப்ளி-தஞ்சை இடையேவாராந்திர சிறப்பு ரெயில்


கர்நாடக மாநிலம் ஹூப்ளி-தஞ்சை இடையேவாராந்திர சிறப்பு ரெயில்
x

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

கோரிக்கை

கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதிகளான ஹூப்ளி, பெல்காம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பெருவாரியான பக்தர்கள் தினந்தோறும் வந்து தரிசித்து செல்கிறார்கள். அதேபோல் டெல்டா மாவட்டத்தில் இருந்து கர்நாடகப் பகுதிகளில் வர்த்தகத் தொடர்பு இருந்து வருகிறது.தஞ்சை-கும்பகோணம் ரெயில் பாதை அகல பாதையாக மாற்றப்பட்ட 2004-ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் இருந்து பெல்காம் வரை நேரடி ரெயில் இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தினரும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வாரம்தோறும் சிறப்பு ரெயில்

அதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பெல்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சுரேஷ் அங்காடி ஆகியோரும் கோரிக்கை வைத்தனர். அண்மையில் திருச்சியில் ரெயில்வே துறை சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செ.ராமலிங்கம் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர் இவற்றையடுத்து, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சை வரை சிறப்பு ரெயில் ஒன்றினை தென்னிந்திய ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த ரெயில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்டு தாவனகரே, தும்கூர், கிருஷ்ணராஜபுரம் பைப்பனஹள்ளி (பெங்களூரு), சேலம், கரூர், திருச்சி, பூதலூர் வழியாக தஞ்சைக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 2.15 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கத்தில் இந்த ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் தஞ்சையில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12.30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் மார்ச் 20-ந் தேதி முதல் ஏப்ரல் 25-ந் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது. இதற்கு தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி மற்றும் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Next Story