அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 25 Nov 2022 4:26 AM GMT (Updated: 2022-11-25T10:18:39+05:30)

அய்யப்பபக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த வாராந்திர சிறப்பு ரெயில் (06068), எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவ.28, டிச.5, 12, 19, 26,ஜன.2 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வரும்.

அதேபோல, தாம்பரத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரெயில் (06067), நவ.29, டிச.6, 13, 20, 27, மற்றும் ஜன. 3 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும்.

இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளை யம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம் வழியாக எர்ணா குளத்தை சென்று அடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story