கோவை-ராஜஸ்தான் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


கோவை-ராஜஸ்தான் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

கோவை,

சேலம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கோவை- பஹத்ஹிகோதி சிறப்பு ரெயில் (எண் 06181) சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமார்க்கமாக வருகிற 17-ந் தேதி முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் பஹத்ஹிகோதி நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும். பஹத்ஹிகோதி- கோவை விரைவு ரயில் (எண் 06182) புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், பூர்னா, வாசிம், அகோலா, சூரத் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story