ராஜஸ்தான் மாநிலத்திற்கு தாம்பரத்தில் இருந்து சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்


ராஜஸ்தான் மாநிலத்திற்கு தாம்பரத்தில் இருந்து சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 27 April 2023 1:00 AM IST (Updated: 27 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சூரமங்கலம்:-

கோடை காலத்தில் ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம்-ஜோத்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06055) இன்று (வியாழக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வியாழக்கிழமைகளில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு சொரனூர், கோழிக்கோடு, கண்ணூர், மங்களூர் வழியாக சனிக்கிழமை மாலை 5.20 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் ஜோத்பூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06056) வருகிற 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஜோத்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செவ்வாய்க்கிழமை மதியம் 1.05 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 1.07 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக இரவு 7.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story