போலீஸ் தேர்வு மைய பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி


போலீஸ் தேர்வு மைய பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
x

போலீஸ் தேர்வு மைய பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணிகளுக்கானதேர்வு மருதர் கேசரி மகளிர் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி, இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆகிய 4 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சி வாணியம்பாடி ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது தேர்வு மையங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், பாதுகாப்பு பணிகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ் பாண்டியன், கணேசன், சரவணன், தங்கதுரை, விநாயகம், மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பழனி, நாகராஜன், அருண்குமார், சாந்தி, ஜெயலட்சுமி, மங்கையர்கரசி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story