சென்னை எழும்பூர்- கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்னை எழும்பூர்- கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர்- கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்சூரமங்கலம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06061) வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.33 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா வழியாக மறுநாள் காலை 6.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்,
இதேபோல் மறு மார்க்கத்தில் கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06062) வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 8.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 8.20 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்,
இதேபோல் சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06063) இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளிலும், மறு மார்க்கத்தில் கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06064) நாளை மறுநாள் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும், மற்றொரு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06065) வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி வரை திங்கட்கிழமைகளிலும், மறு மார்க்கத்தில் (வண்டி எண் 06066) வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.