கோவாவில் இருந்து சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்


கோவாவில் இருந்து சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

கோவாவில் இருந்து சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சேலம்

சூரமங்கலம்:

கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம், நாமக்கல், கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்புரெயில் (07357) வருகிற 27-ந் தேதி வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 4.05 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.10 மணிக்கு புறப்பட்டு ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக மதியம் 12.25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா சிறப்பு ரெயில் (07358) 28-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.35 மணிக்கு புறப்பட்டு 30-ந் தேதி காலை 4 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

மேலும் வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் (07359) அடுத்த மாதம் 2-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 11.55 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா சிறப்பு ரெயில் (07360) அடுத்த மாதம் 4-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story