சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்


சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 28 April 2023 1:00 AM IST (Updated: 28 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சூரமங்கலம்:

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் விவரங்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சிறப்பு ரெயில்கள்

ரெயில்களில் ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து காரைக்குடிக்கு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்- 07389) இன்று (வெள்ளிக்கிழமை) ஹூப்ளி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மாலை 6.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.44 மணிக்கு நாமக்கல் சென்றடையும். அங்கிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.23 மணிக்கு கரூரூக்கும், பின்னர் திருச்சி, புதுக்கோட்டை வழியாக நள்ளிரவு 12.35 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07390) காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வழியாக மாலை 4.03 மணிக்கு நாமக்கல் வந்தடையும். பின்னர் அங்கிருந்து 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

கேரளாவுக்கு இயக்கம்

மேலும் கர்நாடக மாநிலம் அர்சிகெரே ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். அதன்படி இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்-06205) இன்று அர்சிகெரே ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக இரவு 7.47 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் கண்ணூர்-அர்சிகெரே சிறப்பு ரெயில் (வண்டி எண்-06206) நாளை கண்ணூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், சோரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 4.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 4.48 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாக மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அர்சிகெரே ரெயில் நிலையம் சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story