சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்


சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
x

வயலூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

வேட்டவலம்

வேட்டவலம் அருகே வயலூர் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் இன்று நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா திருமால் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர் ராஜ்குமார் வரவேற்றார்.

முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட தொழிற்சார் சமூக வல்லுனர்கள் வேலு, சிந்தியா, கால்நடை பயிற்சியாளர் சுமதி ஆகியோர் கால்நடைகளுக்கான முதலுதவி பெட்டகத்தினை வழங்கினர்.

பின்னர் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் 300 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

மேலும் செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

முடிவில் பால் கூட்டுறவு சங்க செயலாளர் தெய்வீகன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story