சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்
கொண்டசமுத்திரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.
வேலூர்
குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி சாமியார்மலை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.சிவகவி, இ.தமிழ்ச்செல்வி, எஸ்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் முகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கல்லப்பாடி கால்நடை மருத்துவர் எம்.ரமேஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் மாடுகள், ஆடுகள், கோழிகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகள் என மொத்தம் 904 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story