கரூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்


கரூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

சிறப்பு கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நொய்யல் குறுக்குசாலை பங்களா நகரில் உள்ள அம்மா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருவாய்த்துறையினர் மூலம் வழங்கப்படும் இணைய வழி சான்றுகள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தும், குழந்தைகள் திருமணம் நடைபெறுவதை தடுப்பது குறித்தும் மற்றும் பல்வேறு கருத்துக்களை பொதுமக்களிடையே விளக்கமாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோம்புப்பாளையம் ஊராட்சி சார்பில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றதலைவர் பசுபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருக்காடுதுறை ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்றதலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நஞ்சை புகழூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார் துணைத்தலைவர் செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம்-தரகம்பட்டி

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கம்மநல்லூர் ஊராட்சி சார்பாக ரெட்ட மாரத்தான் கோவிலில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றதலைவர் இந்துமதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளில் ேநற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், மாவுத்தூர் ஊராட்சியில் தலைவர் கீதா செந்தில்மோகன், கடவூர் ஊராட்சியில் தலைவர் செல்லமுத்து, முள்ளிப்பாடி ஊராட்சியில் தலைவர் நீலா வேல்முருகன், ஆதனூர் ஊராட்சியில் தலைவர் பூமா ராஜேந்திரன், தேவர்மலை ஊராட்சியில் தலைவர் நக்கீரன், மேலபகுதி ஊராட்சியில் தலைவர் மாணிக்கம், கீழபகுதி ஊராட்சியில் தலைவர் ஷாஜகான் ஆகியோர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


Next Story