நிலக்கோட்டை பகுதி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்


நிலக்கோட்டை பகுதி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x

நிலக்கோட்டை பகுதி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே பச்சமலையான்கோட்டையில், 2021-22-ம் ஆண்டிற்கான 100 நாள் வேலை திட்டப்பணிகள் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காளீஸ்வரி, ஊராட்சி செயலாளர் ஜெய்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் பணி வழங்குவதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும், இந்த திட்டத்தில் தினக்கூலியை ரூ.400ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த கூட்டத்தில் பொதுமக்கள், சுயஉதவிக்குழு பெண்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் சிலுக்குவார்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன் தலைமையிலும், பிள்ளையார்நத்தம் ஊராட்சி சிறுநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜா தலைமையிலும், சித்தர்கள்நத்தம் ஊராட்சி குத்தில்நாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முத்தையா தலைமையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


Next Story