வைகாசி விசாகத்ைதயொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைகாசி விசாகத்ைதயொட்டி  முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

வைகாசி விசாகத்ைத யொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரி:

வைகாசி விசாகத்ைத யொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகம்

முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக விழா தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு வைரஸ் தொற்று குறைந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக விழாவையொட்டி நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலை ஸ்வர்ண மண்டபத்தில் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் யானை வாகனத்தில் சாமி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

நெசவாளர் நகர்

தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள வேல்முருகன் கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், எஸ்.வி. ரோடு சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோன்று லளிகம் தண்டாயுதபாணி சாமி கோவில், இண்டூர் சிவசுப்ரமணிய சாமி கோவில், பாப்பாரப்பட்டி புதிய மற்றும் பழைய சிவசுப்ரமணிய சாமி கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story