வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆஷாட நவராத்திரிபஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆஷாட நவராத்திரிபஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வராகி அம்மன் பிரதிஷ்டை
தர்மபுரி எஸ்.வி. ரோடு சித்த லிங்கேஸ்வரர்- முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் வராகி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பஞ்சமி நாளான நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வராகி அம்மன் விக்ரகத்திற்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் தச தரிசனம், கோபூஜை ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.
நவராத்திரி விழா
காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் முக்கிய நாளான நேற்று பஞ்சமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அம்மனுக்கு மாதுளம் பழங்களால் சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.