சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு


சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில்,. வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், தேனி, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர்.

பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர்.

வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story