வெம்பக்கோட்டை பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வனமூர்த்திலிங்காபுரத்தில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். அதேபோல தாயில்பட்டி தெற்கு தெருவில் உள்ள கழுவுடை அம்மன் கோவில், சுப்பிரமணியபுரம் காளியம்மன் கோவில், இறவார்பட்டி காளியம்மன் கோவில், இணாம் மீனாட்சிபுரம் அழகம்மாள் கோவில், மார்க்கநாதபுரம் முப்பிடாதி அம்மன் கோவில், கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story