அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நன்னிலம் பகுதியில் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர்
நன்னிலம்:
தமிழ் புத்தாண்டு என்பது அனைவராலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். நேற்று தமிழ் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நன்னிலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் பொங்கலிட்டு, கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி நன்னிலம் அருகே உள்ள மூங்கில் குடி, ஓமக்குளம், சுறக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பால்காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story