பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வாய்மேடு:
தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது.வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பங்குனிமாத தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், பன்னீர், இளநீர்,சந்தனம், நெய், திருநீறு, திரவியம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வன்மீகநாதர் கோவில்
இதேபோல் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.