பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
அகஸ்தியன்பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் பக்தர்குளம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் இரு முடிகட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று பக்தர்குளம் மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர் இளநீர், உள்ளிட்ட 16 வகை திராவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story