துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருச்சிற்றம்பலம் அருகே பாலத்தளி துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பாலத்தளி துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது துர்க்கை அம்மனுக்கு அர்த்தநாதீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோன்று, புராதனவனேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மன், செருவாவிடுதி போத்தி அம்மன், உப்பு விடுதி அக்னி காளியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story