கண்ணகி கோவிலில் சிறப்பு வழிபாடு


கண்ணகி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் கண்ணகி கோவிலில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை

திருவெண்காடு:

தமிழர் கடவுள் என அழைக்கப்படுகின்ற கண்ணகி, பூம்புகாரில் பிறந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழர்களால் போற்றி வணங்கப்படுகின்ற கண்ணகிக்கு பூம்புகார்-மேலையூரில் கோவில் உள்ளது. ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று கண்ணகி, பூ பல்லக்கில் ஏறி விண்ணுலகம் சென்றதாக வரலாறு. இந்த நாளை கண்ணகி வீடு பேரு அடைந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கண்ணகி கோவிலில் நேற்று கண்ணகிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கண்ணகிக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கவிஞர் சோமசுந்தரம் கண்ணகியின் பெருமை பற்றி பாடல்கள் பாடினார். இதில் கண்ணகி கோட்ட காப்பாளர் ராஜசேகரன், தமிழ் அறிஞர்கள், செட்டி நாட்டு பெருமக்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story