மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல சாத்தூர் மாரியம்மன் கோவில், படந்தால் துர்க்கை அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story