மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதேபோல் பெரியஓடைப்பட்டி ஸ்ரீவன்னிவிநாயகர் ேகாவில், சாத்தூர் சாத்தூரப்பன் கோவில், சிவன் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.