மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இருக்கன்குடி, போத்திரெட்டிபட்டி, வன்னிமடை, நீராவிபட்டி, கலிங்கப்பட்டி, கே.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பொங்கல் வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் துணைமாலை அம்மனுக்கு வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.