மீனாட்சிப்பட்டிஹோலிகிராஸ்பொறியியல் கல்லூரியில் சிறப்பு ஆராதனை
மீனாட்சிப்பட்டிஹோலிகிராஸ்பொறியியல் கல்லூரியில் சிறப்பு ஆராதனை கூட்டம் நடந்தது.
ஏரல்:
மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 2022-ம் ஆண்டு கடைசி மாதத்துக்கான நன்றி செலுத்தும் சிறப்பு ஆராதனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். நெல்லை காட்வின் சிறப்பு துதி ஆராதனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த அசெஞ்சர் கம்பெனி உயர் அதிகாரி ஜெயராம் ஆசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2022- ம் ஆண்டு கடைசி மாதத்துக்கான நன்றி செலுத்தியும், 4 ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பினை பெறுவதற்குரிய ஆலோசனையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி, பேராசிரியர்கள் மாணவ- மாணவிகள் மற்றும் செபத்தையாபுரம், அடைக்கலாபுரம், பண்ணைவிளை, அனியாபரநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.