நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேய்பிறை அஷ்டமியையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சம்ஹார பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நடராஜருக்கு அபிஷேகம்

நடராஜர், சிவகாமசுந்தரிக்கு மார்கழி ஆருத்ரா, ஆனி திருமஞ்சனம், சித்திரை திருவோணம் உள்பட வருடத்திற்கு 6 நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story