நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் சித்ராபவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைெயாட்டி விநாயகர், வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர், பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகள், பாம்பன் சுவாமிகள், பாலதண்டாயுதம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story