பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர்
நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர், துளாசியால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியை பல்லாக்கில் அமர வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story