பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர்
தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ் பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பால், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியகளால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமரவைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
நொய்யல் அருகே கோம்புபாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வகையான மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story