பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
வேளுக்குடிபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர்
கூத்தாநல்லூர்ூ
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் இக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருமக்கோட்டை ரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக ரெங்கநாத பெருமாளுக்கும், இந்த கோவிலல் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story