சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நாகை கிழக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை நீலா தெற்கு வீதியில் கிழக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத மண்டல பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கிழக்கு சபரிமலை அய்யப்பன் யாத்திரை குழுவினர் பால்குடம் எடுத்து கொண்டு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் இருந்து பெருமாள் மேலவீதி, நீலா மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அய்யப்பனுக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, கரும்பு, இளநீர், பால், பன்னீர், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிரசாத படையலுடன் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story