சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
வாய்மேடு சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
வாய்மேடு:
தலைஞாயிறு அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினம்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. நேற்று சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், தேன், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல வாய்மேட்டை அடுத்த வண்டு வாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு உள்ளிட்டவைகள் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.