சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் தேங்காய், பூசணிக்காயில் தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.
குத்தாலம்:
தேய்பிறை அஷ்டமியையொட்டி சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் தேங்காய், பூசணிக்காயில் தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.
காலபைரவர் கோவில்
குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழைமை வாய்ந்த காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்து காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் காசிக்கு நிகராக சிறப்பு பெற்றது.
பைரவரின் சூலாயுதம் இந்த கோவிலில் கிடைக்கப்பெற்றதால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது.
சிறப்பு வழிபாடு
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக. பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து திருமணத்தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும் வேண்டி திரளான பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் ஆகியவற்றில் தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.