மார்கழி மாத பிறப்பையொட்டி சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


மார்கழி மாத பிறப்பையொட்டி    சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத பிறப்பையொட்டி சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் மணிநதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்தை சமேத பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் குளத்தூர், தியாகராஜபுரம் லட்சுமி நாராயணபெருமாள், காட்டுவன்னஞ்சூர், சங்கராபுரம் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள பெருமாள், சிவன், அம்மன், முருகன், விநாயகர், அய்யப்பன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story