சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று விஜயபாத புண்ணிய கால வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திருவெம்பாவை, சிவபுராணம் உள்ளிட்ட பல்வேறு தேவார பதிகங்களை பக்தர்கள் பாடி வழிபாடு மேற்கொண்டனர். சுவாமி, அம்பாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க சோடச உபச்சாரங்கள் நடைபெற்றன. மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் பிரகார திருச்சுற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.


Next Story