மகா சிவராத்திரியையொட்டி ஊட்டியில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்
மகா சிவராத்திரியையொட்டி ஊட்டியில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்
நீலகிரி
ஊட்டி
ஊட்டி வேலிவியூ பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சனிப்பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து நந்தியம் பெருமாளுக்கு பல்ேவறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து சிவபெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story