சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே ஆக்கூரில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு சித்திரை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தயிர், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story