சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தென்காசி

சிவகிரி:

சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாள் இரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடந்தது. 10-ம் நாளான நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இரவில் கோவில் வளாகத்தில் உள்ள முத்தால ராவுத்தர் பீடத்துக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், அஜரத் ஆதம் தலைமையில், திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு, முத்தால ராவுத்தர் பீடத்துக்கு மலர்போர்வை போர்த்தியும், பூக்களால் அலங்கரித்தும், பொரி, அப்பம், போளி, சர்க்கரை, மாவு போன்றவற்றை வைத்தும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

நள்ளிரவில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ச்சுனருக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் முத்தால ராவுத்தர் வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story