திருமூலர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சாத்தனூர் திருமூலர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே திருமூலர் அவதரித்த சாத்தனூரில் திருமூலருக்கென தனி கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத அசுபதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக திருமூலருக்கு மஞ்சள், திரவியம்,தேன், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பொறுப்பாளர் சந்திரசேகரன் மற்றும் திருமூலர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story