Normal
வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு
வைகாசி மாத கிருத்திகையையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வைகாசி மாத கிருத்திகையையொட்டி இந்த கோவிலில் உள்ள செல்வமுத்து குமாரசாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் செல்வமுத்து குமாரசாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story